இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு.!

தற்பொழுது இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி, உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும், விமர்சனங்களும் அதிகளவில் குவிந்தது. இந்நிலையில் வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை இந்தியாவில் நிறுத்தப் போவதாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறியதில், அந்த நிறுவனத்தின் சார்பில், ஆசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நியூட்ரோஜினா ஃபைன் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது. ஆனால் தற்பொழுது இந்தியாவிலும் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச். யூ எல்), அதன் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தோல் பராமரிப்பு கிரீமான ‘Fair&Lovely’ என்பதனை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விற்பனை பிராண்டான இந்த “Fair & Lovely” என்ற முக பராமரிப்பு தோல் வெண்மை கிரீமில் இருந்து ‘Fair’ – ஐ கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.