இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா தலையிட தேவையில்லை.! சீனா பதிலடி.!

‘இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை.’ – சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லெஜியன்.  

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் சில நாட்களாக எல்லை பிரச்சனை எழுந்து வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளதால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இருநாட்டிற்குமான இந்த பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்காவானது  இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்துவைக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து கூறியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில், சீன வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் அதிகாரி ஷாவோ லெஜியன் கூறுகையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையை இரு நாட்டினரும் ஆலோசனை செய்து தீர்த்து கொள்வோம். இதில் மூன்றாம் நாடு தலையிட வேண்டாம் என தெரிவித்தார். மேலும், தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது இதனால் இருநாட்டினரும் எளிதாக ஆலோசனை செய்து தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.