உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்;3-வது நாள் ஆட்டம் லைவ்…விராட் கோலி,ரஹானே ஆட்டமிழப்பு…!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி,துணை கேப்டன் ரஹானே ஆட்டமிழப்பு.

சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் இருந்தனர்.

இதனையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், காலையில் சவுத்தாம்ப்டனில் மழை பெய்தது. இதனால், மைதானம் ஈரப்பதமாக இருந்தது.இதைத்தொடர்ந்து,இந்திய நேரப்படி போட்டி 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,கைல் ஜேமீசன் வீசிய பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களில் அவுட்டானார். இதனால்,இந்திய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது.இதனைத் தொடர்ந்து,ரிஷப் பந்த் 4 ரன்களில் அவுட் ஆனார்.இதன்காரணமாக,3 ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், 77 ஓவர்கள் முடிவில் ரஹானே (42 *), ரவீந்திர ஜடேஜா (6 *) என்ற நிலையில் இருந்தனர்.

ஆனால்,சில நிமிடங்களில் துணை கேப்டன் ரஹானே 49 ரன்களில் அவுட் ஆனார்.இது இந்தியாவுக்கு மற்றொரு அடியாக இருந்தது.மேலும்,இந்திய அணியினர் 78.4 ஓவர்கள் முடிவில் 182 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட் ஆனார்.தற்போது களத்திலுள்ள ரவீந்திர ஜடேஜா 43 பந்துக்கு 15 ரன்களும்,இஷாந்த் ஷர்மா 6 பந்துகளுக்கு 2 ரன்களும் எடுத்துள்ளனர். இதனால்,இந்திய அணியினர் 89 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளனர்.தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.