கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ! ரூ.73,95,90,000 நிதி முதல்கட்டமாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.தெற்காசிய நாடுகள்  அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.எனவே  பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று தெற்காசிய நாடுகளின்  தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக  இன்று  ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் .இந்திய மதிப்பில் ரூ.73,95,90,000  நிதி முதல்கட்டமாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு