INDvsBAN:106 ரன்னில் இந்தியாவிடம் சுருண்ட பங்களாதேஷ் அணி..!

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த  போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக இம்ருல் ,ஷாட்மேன் இருவரும் களமிங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இம்ருல் 4 விக்கெட்டை இழந்து வெளியேறினர்.பின்னர் இறங்கிய மோமினுல் ஹக், முகமது மிதுன்ப், முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.
தொடக்க வீரர் ஷாட்மேன் 29 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். மத்தியில் இறங்கிய லிட்டன் தாஸ் நிதானமாக விளையாடி வந்து கொண்டு இருந்த போது காயம் காரணமான 24 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒன்றை இலக்கு ரன்னுடன் விக்கெட்டை இழந்தனர்.  இந்நிலையில் பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 106 எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா  5,  உமேஷ் 3 , மற்றும் ஷமி 2  விக்கெட்டை வீழ்த்தினர்.இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடக்கி விளையாடி வருகிறது.

author avatar
murugan