AUSvIND: 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். 1.5 ஆம் ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.

மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. அதன்படி, 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, இன்றைய இறுதிநாள் ஆட்டத்தை தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 7 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்கள். நிதானமாக ஆடிவந்த புஜாரா, சுப்மன் கில்லுடன் இணைந்தார். இருவரும் பொறுமையாக ஆடிவந்த நிலையில், 91 ரன்கள் அடித்து சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய ரஹானே, 24 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த புஜாரா 56 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் பொறுமையாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் 9 ரன்களில் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்துடன் இணைந்தார். பின்னர் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

53 பந்துக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியான ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தர் வெளிக்காட்டினார். 22 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறியதை தொடர்ந்து, நவதீப் சைனி களமிறங்கினார். 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் 4 ரன்கள் அடித்து இந்திய அணியை 4 ஆம் டெஸ்ட் போட்டியை வெற்றிபெற செய்தார்.

இதன்மூலம் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், 2 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.

Recent Posts

அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…

5 mins ago

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…

15 mins ago

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்…

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…

22 mins ago

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…

49 mins ago

தங்கச்சி கிடையாது தம்பி தான்! கில்லி படத்தை மிஸ் செய்த அழகி பட பிரபலம்?

Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…

50 mins ago

ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…

1 hour ago