• இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது. 
  • இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் . 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த டெல்லியில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடரை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் .ஏனென்றால் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணியும்,இந்தியாவில் தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும் கடும் போட்டிபோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here