ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி…!

அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 55 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதையடுத்து, தற்போது இந்தியவிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.