இறுதி போட்டியில் இந்தியா ,இங்கிலாந்து அணிகள் மோதும் – டு பிளெஸ்ஸிஸ்

நேற்று கடைசி லீக் போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது.அதில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ,தென்னாப்பிரிக்கா அணி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்  இப்போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற தென்னாப் பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

தென்னாப்பிரிக்கா அணியில் டு பிளெஸ்ஸிஸ்  , டுசென் , அதிரடியில் 50 ஒவரில் 325 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  315 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் போட்டி முடித்த பின் பேசிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணிக்கு மகிழ்ச்சியை தரும் என நினைக்கிறேன்.நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி ,இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது என கூறினார்.

மேலும் இறுதி போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத வாய்ப்பு உள்ளது என கூறினார்.நியூஸிலாந்து அணி கடைசியாக  சில போட்டிகளில் சரியாக விளையாட வில்லை  என தெரிவித்தார்.

நாளை மறுநாள் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும்  முதல் அரையிறுதி போட்டியில் மோத உள்ளது.மேலும் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை ஒரு நிகழ்ச்சியில் இறுதி போட்டியில் இந்தியாவும் ,இங்கிலாந்து அணியும் தான் மோதும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan