லெபனான் அணியை வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றது.
புவனேஷ்வரில் நேற்று நடந்த இன்டர்காண்டினென்டல் கால்பந்து இறுதிப்போட்டியில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவும், லெபனானும் லீக் சுற்று போட்டிகளில் மோதிய போது இரு அணிகளும் கோல் இன்றி போட்டி ட்ராவில் முடிந்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நொடிகளில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடிக்க, 66வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்து முன்னிலையை வலுவாக்கினார். மேற்கொண்டு விளையாடிய போதிலும் லெபனான் அணி எந்த கோலும் அடிக்காததால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, 2018க்கு பிறகு இது இந்தியாவிற்கு இரண்டாவது இன்டர்காண்டினென்டல் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
India lift the Intercontinental Cup ????
(via @IndianFootball) pic.twitter.com/n59jpCn0O0
— ESPN India (@ESPNIndia) June 18, 2023