ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகரிக்கும் வருவாய்.. கடந்த மாதத்தில் மட்டும் ₹10.13 கோடியாம்!!

ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை இல்லாதளவில் கடந்த மாதம் மட்டும் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் 35 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்மூலம், சென்னை ரயில் சென்னை ரயில்வே கோட்டம்கோட்டத்திற்கு சுமார் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாதளவு எனவும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், வெறும் 6.41 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பாக, கார்களை அதிக அளவு ஏற்றிச்செல்லும் டபுல் டக்கர் வகையான புதிய வகை பெட்டிகளை கொண்டு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் சரக்கு போக்குவரத்துத்துடன், வருவாயும் இரட்டிப்பானதற்கு காரணம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.