அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. அச்சத்தில் மக்கள். முதலில்

By leena | Published: May 20, 2020 09:15 AM

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. அச்சத்தில் மக்கள்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது.  இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 

இதுவரை உலக அளவில் இந்த வைரஸால், 4,986,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 324,912 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸால், 1,570,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,533 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் நேற்று மட்டும், 1,552 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc