அதிகரிக்கும் கொரோனா தொற்று…! கேரளாவில் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ரத்து…!

அதிகரிக்கும் கொரோனா தொற்று…! கேரளாவில் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ரத்து…!

மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது இரண்டு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையயில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 16-ம் தேதி வரை கேரள அரசு முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து  அங்கு, அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மேலும், அத்தியாவசிய சரக்கு போக்குவரத்திற்கு முன் அனுமதியுடன் அனுமதி வழங்கப்படும்  என்றும்,  பால், பத்திரிகை விநியோகம், மருத்துவம் சார்ந்த  சேவைகள், தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கூறுகையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நிலைமை மோசமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் பரிசோதனையில் பாசிட்டிவ் சதவீதம் அதிகரித்து  வருகிறது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக கல்லூரி விடுதிகள் மற்றும்  லாட்ஜுக்களை  பயன்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவக்கல்லூரி  மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது இரண்டு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube