Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுதொடரும் IT ரெய்டு.! விழுப்புரம் மற்றும் கோவையிலும் வருமானவரித்துறை தீவிர சோதனை..!

தொடரும் IT ரெய்டு.! விழுப்புரம் மற்றும் கோவையிலும் வருமானவரித்துறை தீவிர சோதனை..!

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடக்கிறது.

இந்த சோதனையானது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் வீடுகள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி சோதனை: அரசியலாக்க வேண்டாம் – கரு.நாகராஜன்

அந்த வகையில், கரூரில் நான்கு இடங்களிலும், விழுப்புரம் மற்றும் கோவையில் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவையில் ஐந்து இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் கோல்டன் மார்பில் நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.