ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்க தொகை ரூ.1 லட்சமாக உயர்வு -அரசு அறிவிப்பு ..!

முழுநேர முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்க தொகை ரூ.1 லட்சம்  உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு  ரூ.2.50 இலட்சத்திலிருந்து ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ.50.000-லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்.96, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந 3)துறை, நாள் 25.11.2021-இல் ஆனை வெளியிடப்பட்டது.

இத்திட்டதிற்க்கென, 2021-2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும். 2020-2021 ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

author avatar
murugan