புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா… காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு.!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.

கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும், என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கை விடுத்தது வந்த நிலையில், இது ஜனாதிபதியை மட்டும் அவமதிக்கும் செயல் அல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் மதிப்பு பறிக்கப்படும் போது, அந்த புதிய கட்டிடத்திற்கு மதிப்பில்லை. இதனால் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக 19 கட்சிகளின் கூட்டு முடிவாக அறிவிக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Congress Statement
Congress Statement Image AICCMedia
author avatar
Muthu Kumar