முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!

உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என  அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு. 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. மிட்சுபிஷி நிறுவனத்தின் 1,891 கோடி செலவிலான ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கியமான முதலீடு இது; இந்த முதலீடானது 100% வெளிநாட்டு முதலீடாக அமைந்துள்ளது; உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.