அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை.. வானிலை மையம் ..!

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய ஓரிரு பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

கடந்த வாரம் வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் சூறாவளிக்காற்று என இயற்கை சீற்றங்கள் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் எந்தெந்த இடங்களில் மழைப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஓரிரு இடங்களில் மட்டுமே மிதமான மழை பொலிவு இருக்கும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை தான் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்சமாக 31 டிகிரியும், குறைந்த பட்சமாக 22 டிகிரியும் வெப்பநிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியும் வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal