இளையராஜா இசையில்…தனுஷ் குரல்..! உருகவைக்கும் ‘விடுதலை’ முதல் பாடல் இதோ.!

சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

விடுதலை படத்தின் முதல் பாடல் 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  படத்திற்கான முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அந்த பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது ‘விடுதலை’ படத்தின் முதல் பாடலான “ஒன்னோட நடந்தா”  பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் வரும் இசையும், தனுஷின் குரலும் பாடலை கேட்போர்களை உருகவைத்துள்ளது. பாடலை கேட்ட அனைவரும் பாடல் அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

விடுதலை 

Soori Viduthalai
Soori Viduthalai Image Source Twitter

இந்த விடுதலை திரைப்படத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment