கடந்த ஒரு வாரமாக கொரோனா அண்டாத மாநிலமாக மாறி வரும் அசாம்.!

கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும், 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் இதவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒரு நபர் மட்டும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர், ‘ உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. இதுவரை 5,789 பேரின் பரிசோதனை மாதிரிகள்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 214 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும், மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரும் 25-ஆம் தேதி கவுகாத்தியில் உள்ள மீட்கால் கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவுள்ள.’ என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.