ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத்..? இன்று கொல்கத்தா அணியுடன் மோதல்..! உத்தேச வீரர்களின் பட்டியல் இதோ..

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத்..? இன்று கொல்கத்தா அணியுடன் மோதல்..! உத்தேச வீரர்களின் பட்டியல் இதோ..

KKR vs GT

ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 39 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

GTvsKKR
GTvsKKR Image source dream11

கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கொல்கத்தா அணி வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குஜராத் அணி, இதுவரை நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 வெற்றிகளை குவித்த குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா.? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

KKRvsGT
KKRvsGT Image source TwitterICC Cricket Schedule

கொல்கத்தா vs குஜராத் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : 

என் ஜெகதீசன் (W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (C), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. மாற்று வீரர் – சுயாஷ் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ் :

விருத்திமான் சாஹா (W), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (C), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube