காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம் – ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேனியில்  காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை தனிமனிதனின் அறிக்கை அல்ல, காங்கிரஸ்  தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் ஒருமித்த குரல் .காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீட் தேர்வு குறித்து குறிப்பிட்டோம்.

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம்.ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் கொடுக்கும்போது இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடையும்.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழகத்தை நிர்வகிக்க பிரதமர் மோடி விரும்புகிறார்.மோடியின் வெறுப்பு அரசியலை, விருப்பு அரசியலை கொண்டு வீழ்த்துவோம்.தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை எந்த சக்தியாலும் செயல்படுத்த முடியாது.வெறுப்பும், கோபமும் தமிழக மக்களை பணிய வைக்க முடியாது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறை செல்லும் நிலைமை ஏற்படாது. விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

Leave a Comment