கூட்டத்திற்குள் கார் புகுந்ததில்:6 பேர் பலி , ஓட்டுநருக்கு துப்பாக்கி சூடு

  • கார்  நிற்காமல் சென்றதால்  போலீசார் காரின் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் இறந்தார்.
சீனாவின் உள்ள சோயாங் நகரில் பயங்கர வேகத்தில் வந்த  கார் ஓன்று பொது இடத்தில் இருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து நிற்காமல் சென்றது, இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்  நிற்காமல் சென்றதால்  போலீசார் காரின் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் இறந்தார். இந்த செய்தியை  சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
சீனாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூனான் மாகாணத்தில் இதேபோல  மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது அந்த சம்பவத்தில் 11 பேர் இறந்தனர்.
பின்பு  ஓட்டுநரை  கைது செய்த போலீசார் விசாரணையில் வஞ்சக நோக்கத்துடன் திட்டமிட்டு செய்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் ஆரம்ப பள்ளி  முன்பு உள்ள தெருவை கடந்து சென்ற பள்ளி குழந்தைகள் மீது கார் மோதியதில் 5 குழந்தைகள் இறந்தனர். 19 குழந்தைகள்  காயம் அடைந்தனர்.
ஓட்டுனரை போலீசார் விசாரித்தபோது தற்கொலை எண்ணத்தில் சென்றபோது , இந்த தாக்குதலை நடத்தியதாக  ஓட்டுநர் கூறியதாக தகவல் வெளியானது.

.

author avatar
murugan

Leave a Comment