தமிழக மக்களவை தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை வகிக்கிறது

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடித்து உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி  முன்னிலை வகிப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் -வி.எம்.ஆர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 29 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்-நேத்தா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 17 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.என்.என்.நியூஸ் 18 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 22-24 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 14-16 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 20 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 10 இடங்களிலும்,பாஜக 2 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 31 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 6 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 34-38 இடங்களிலும்,அதிமுக கூட்டணி 0-4இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

என் டிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, திமுக கூட்டணி 26 இடங்களிலும், அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மே 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்று தான்  வெற்றி பெற போவது யார் என்பது தெளிவாக தெரியும்.

author avatar
murugan

Leave a Comment