கர்நாடகாவில் ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு..2,627 பேருக்கு கொரோனா.!

கர்நாடகாவில் ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு..2,627 பேருக்கு கொரோனா.!

கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 684 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காரோண தொற்று உயர்ந்தாலும் 693 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 15,409 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூருவில் ஜூலை 14 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube