தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும், எதுவும் செய்ய முடியாது….!அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும், எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும், எதுவும் செய்ய முடியாது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு சிறந்து விளங்குவதால் தான் பல வெற்றிகளை கண்டுள்ளது என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.