ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.98,202 கோடி வசூல் 4.51% அதிகரிப்பு

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்து 98,202 கோடியாக வசூலாகியுள்ளது  என  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், 98,202 கோடி வந்துள்ளதாகவும்  கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ .93,960 கோடியை விட 4.5 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டில் ஜிஎஸ்டியிலிருந்து வருவாய் வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது இது இரண்டாவது முறையாகும். முதலாவதாக, ஜூன் மாதத்தில் இது ரூ .99,939 கோடியாக இருந்தது. மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ .17,733 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ .24,239 கோடி, மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ .48,958 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ .24,818 கோடி உட்பட) மற்றும் செஸ், 7,273 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட 41,841 கோடி உட்பட) “என்று நிதி அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

மொத்தமாக 75 லட்சத்து 80 ஆயிரம் ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

author avatar
Dinasuvadu desk