10-ம் வகுப்பிலே டெல்லி மாநில கேப்டனான “கிங்” கோலி.. இணையத்தில் வைரலாகும் சுற்றறிக்கை!

விராட் கோலி 10-ம் வகுப்பு படிக்கும்போது அவர் டெல்லி மாநில அண்டர்-15 அணியின் கேப்டன் என்று அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கை, தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம்வருபவர், விராட் கோலி. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் “கிங் கோலி” என்று அழைக்கப்படும் இவர், தனது 15 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கினார். மேலும், 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்ற கோலி முக்கிய பங்கு வகித்தார்.

விராட் கோலி, தனது 16-வது வயதில், முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடினர். அதில் ஒரு போட்டியில் தனது தந்தை இறந்தது கூட தெரியாமல், சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இந்த நிகழ்வு, பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விராட் கோலி 10-ம் வகுப்பு படிக்கும்போது அவர் டெல்லி மாநில அண்டர்-15 அணியின் கேப்டன் என்று அறிவிக்கப்பட்டார்.

அதுகுறித்த சுற்றறிக்கை, தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், டெல்லியின் பாசிம் விஹாரில் உள்ள சேவியர் கான்வென்ட் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த விராட் கோலி, டெல்லி மாநில அண்டர் 15 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளளார். அவர் மட்டுமின்றி, மேலும் 2 பேரின் பெயர்கள் அதில் உள்ளது. இதில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோலி உட்பட மூன்று பேரை பாராட்டி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.