தியாகி ஒசாமா.!குற்றவாளி! என்று கொதிக்கும் பங்காளிகள்!

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை அன்மையில் வெளியான அடுத்த நாளே, பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழந்த சம்பவம் சர்வதேச அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக  கடந்த புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கை கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படுகின்ற  பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத்தின் இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் தற்போது வரை  இருப்பதாக நம்பப்படுகிறது என கூறியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பார்லிமென்டில் பேசினார். அப்போது அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் தியாகி. அமெரிக்கா நம் நாட்டுக்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்.” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.இந்த பேச்சு குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில் இம்ரான் கானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை சர்வதேச அளவில் பெற்றுத் தந்துள்ளது மட்டுமில்லாமல் அந்நாட்டு  எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் இம்ரான் கானை கடுமையாக விமர்சிக்கின்றனர். இது குறித்து பாகிஸ்தான் கட்சியின் எம்.பி  ஷெர்ரி கூறுகையில் ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்” என்று கூறியனார்.அதே போல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப், “எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா, அவர் என்றைக்கும் பயங்கரவாதி தான்.” எனவும் கண்டித்துள்ளார்.

kavitha

Recent Posts

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

4 hours ago

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

5 hours ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

6 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

6 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

9 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

9 hours ago