காஷ்மீர் விவகாரம் !ஐ.நா பொது சபையில் பேசுகிறேன்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பொது சபையில்  பேச உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும்  மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இன்று ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெற்றது.இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளும்  என்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பதற்ற நிலை அணுசக்தி யுத்தத்திற்கு வழிவகுக்கும். ஐ.நா பொது சபையில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று பேச உள்ளேன்.உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.