ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உதவிகளை பாக்.., வழியாக அனுப்ப இம்ரான் கான் அனுமதி..!

இந்தியா வழங்கும் 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல தனது அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் நிறுவப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் இன்டர்-மினிஸ்டீரியல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு (AICC) இன்று இம்ரான் கான் பயணம் செய்தார். முதல் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தியா வழங்கும் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுமதிக்கும் பாகிஸ்தானின் முடிவை அறிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்று அங்கு சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் நோயாளிகள் திரும்புவதற்கு பாகிஸ்தான் வசதி செய்யும் என்று பிரதமர் அறிவித்தார்.

பல வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடனான வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமையை மனிதாபிமான உதவியாக வழங்க இந்தியா முன்வந்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் சாதகமாக பதிலளிக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் இஸ்லாமாபாத்துக்குச் சென்ற தலிபான் பிரதிநிதிகள் கூட, பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைமையிடம் கோதுமை ஏற்றுமதியை அனுமதிப்பது குறித்த பிரச்சினையை எழுப்பினர். இந்நிலையில்,  50,000 டன் கோதுமை, அவசரகால மருத்துவப் பொருட்கள், குளிர்கால தங்குமிடங்கள் மற்றும் பிற பொருட்கள் உட்பட பாகிஸ்தானின் ரூ.5 பில்லியன் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்ப இம்ரான் கான் உத்தரவிட்டார்.

பாகிஸ்தானுக்கான முக்கிய ஆப்கானிய ஏற்றுமதிகள் மீதான கொள்கை ரீதியான வரி மற்றும் விற்பனை வரி குறைப்புக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். நில எல்லைகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் அனைத்து ஆப்கானியர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு கான் உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானியர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதை பாகிஸ்தான் நவம்பர் 13ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

39 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

43 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

43 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

2 hours ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

3 hours ago