ரூ 70,000,00,00,000 முதலீடு செய்யும் சவூதி….மேம்படும் பாகிஸ்தான் பொருளாதாரம்…!!

பாகிஸ்தானில் 70,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை  திட்டத்தை அமைக்க போவதாக சவுதி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 70,000  கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை நிறைவேற்ற போவதாக சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் தல்பாலி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் , சவூதி நாட்டின் பட்டத்து இளவரசர் முஹமதுபின் சல்மான் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கின்றார். அப்போது பாகிஸ்தான் நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உடன்படிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்கு கையெழுத்திடுவார்கள் என்று சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் தல்பாலி தெரிவித்துள்ளார்.மேலும் அந்நாட்டில்  பல துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஏற்கனவே பாகிஸ்தானில் நாட்டில் சீனா முக்கிய நெடுஞசாலைகள் , ரயில்வே பாதைகள் , அதிக சரக்கை கையாளும் திறன் படைத்த துறைமுகம் அமைப்பதற்கான பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டு இருக்கின்றது . இந்நிலையில் சவுதியும் பாகிஸ்தானில் முதலீடு செய்வதால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment