இந்திய அணியை வீழ்த்த பீல்டிங்கில் அதிக முன்னேற்றம் தேவை-சர்பராஸ் அகமது

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் , பாகிஸ்தான் அணியும்  மோதியது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை யும் இழந்து 307 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான்  தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் , பீல்டிங்கில் நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்தியா ,ஆஸ்திரேலியா போன்ற அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால் கண்டிப்பாக பீல்டிங்கில் அதிக முன்னேற்றம் தேவை என கூறினார்.
மேலும் வலுவான அணிகளுடன் விளையாடும் போது பேட்டிங் ,பீல்டிங் என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட நாங்கள் அதிக தவறுகளை செய்தோம்.முதல் 30  ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இல்லை.எங்கள் அணி வீரர்கள் தவறான ஷாட்களை அடித்ததும் நாங்கள் தோற்பதற்கான ஒரு காரணம் என கூறினார்.
இந்த அனைத்து தவறுகளையும் திருத்தி கொண்டு  இந்திய அணியுடன் மிக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என கூறியுள்ளார்.

author avatar
murugan