தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – சலூன் கடைக்கு செல்ல ஆதார் அவசியம்.!

சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களை சலூன் கடைக்காரர்கள் குறித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சலூன் கடைகளில் முடிவெட்ட செல்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவே இந்த ஏற்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்