நீட் மற்றும் JEE தேர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு  இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்வுகள் குறித்து அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதையடுத்து, நீட் மற்றும் JEE தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றினை அமைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை (அதாவது இன்று)  இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதனால், நீட் மற்றும் JEE தேர்வுகளை நடத்தவது குறித்து முக்கிய தகவல் இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

author avatar
murugan