டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றில் புழுதி படிந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள மக்கள் காற்றில் புழுதி படிந்துள்ளதால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காலை ஆறு மணி முதல் தொடங்கிய இந்த புழுதிப் புயல் நாள் முழுவதும் தொடர்ந்தது. மக்கள் தூசியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடிகளைப் பயன்படுத்தினர்.
இந்த பரவலான தூசி படலத்தால் காற்றில் தெரிவுநிலை மிகவும் குறைவாக உள்ளது. என்சிஆர் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசுகிறது.கடந்த ஐந்து நாட்களாக கடும் வெயிலால் டெல்லி மக்கள் தவித்து வரும் நிலையில் இந்த புழுதிப் புயல் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், டெல்லி ஐஎம்டியின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் அளித்த தகவலின்படி, டெல்லி என்சிஆர், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.