கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி போதும் - விஞ்ஞானி தகவல்

கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும்

By venu | Published: Jul 13, 2020 01:41 PM

கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது என்று விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்,வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக முயற்சிகள் செய்து வருகின்றன.ஆனால் கொரோனாவிற்கான மருந்து தாமதமாகி வருகின்றது.இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நோய் தடுப்பு இயக்குனர் பேடா எம் ஸ்டாட்லர் ஆவார்.இவர் ஒரு கட்டூரை ஓன்று எழுதியுள்ளார்.அவரது கட்டூரையில்,  கொரோனாவை புதிய வைரஸ் என்று கூறி வருவது தவறானது.கடந்த 2002-ஆம் ஆண்டு சார்ஸ் மற்றும் சார்ஸ் சிஓவி - 2 என்ற வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றில் உள்ள ஒருவகைதான் கொரோனா.உலக சுகாதார அமைப்பு மற்றும் விஞ்ஞானிகள் வரை கருத்து ஒன்றை முன்வைத்து வருகின்றனர்.

கொரோனாவிடம் இருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தப்பிக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான ஓன்று.பொதுவாக மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது.இது குறித்து போதிய ஆர்ச்சிகள் செய்யவில்லை என்பதே உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc