லட்சுமி ராமகிருஷ்ணன்  ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான “சொல்லவதெல்லாம் உண்மை ” தொகுத்து வழங்கினார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது குணசித்திர நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள  ஒரு கல்லூரியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்க்கும் விதமாக ஓவியங்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தில் ஹிந்து கடவுள்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளனர். இதனை அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த ஓவியம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு டுவிட்டரில் ஒருவர், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.அதில் இந்த ஓவியத்தில் கண்டனம் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுள்ளார்.   உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் உங்க அம்மாவை திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?. எனக்கு என் மதம் எனது அம்மா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.