நான் நலமாக இருக்கேன்… அம்மாவை சமாதானப்படுத்திய விராட் கோலி.!

விராட் கோலி தனது அம்மாவிடம் பேசியதை பற்றி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்

அந்த வகையில் விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார் அதில் தன்னுடைய அம்மா குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் , அவருடைய அம்மா தான் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டதால் ஒல்லியாக காணப்பட்டதாகவும், அதனால் தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தன்னுடைய தாய் கருதியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் முதல் நாள் தனது அம்மாவை அடுத்த நாள் மீண்டும், நீ உடல்நலக் குறைவாக இருப்பதாக தன்னுடைய அம்மா தொடர்ந்து கூறுவார் என்றும், அதுவெல்லாம் மிகச்சிறந்த நாட்கள் என்றும் விராட் கோலி தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.