மீண்டும் இளவரசி,சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடமை..!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் சிறையில் உள்ளார். இந்நிலையில், 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் சுதாகரனுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அந்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள 6 சொத்துக்களை நேற்று முன்தினம் அரசுடைமையாக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள்  அரசுடைமையாக்கப்பட்டது. இன்று தஞ்சையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான வ.உ.சி நகரில் உள்ள 2 கட்டிடங்கள் மற்றும் சில  சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன.

author avatar
murugan