குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை….!!!

432

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இணையதளத்தில் புகார் செய்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் ஆனந்த் கூறியுள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதிய இணையதள முகவரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. [email protected] என புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி உள்ளது. இந்த முகவரியில் கடந்த 1 மாத்தில் மட்டும் அளிக்கப்பட்ட 110 புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை புகார் செய்தால் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.