பணம் கொடுத்தால் தான் படத்திற்கு நல்ல விதமான விமர்சனம்!!பிரபல இயக்குனரை மிரட்டிய புளூ சட்டை மாறன் மீது புகார்!!!

தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ்

By venu | Published: Jan 28, 2019 02:06 PM

தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் டாக்கிஸ்  “புளூ சட்டை மாறன்"  யூட்யூபில்  திரைப்பட விமர்சனங்களை பதிவேற்றி விமர்சனங்களால்  அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர் . ஆன்லைன் விமர்சகர்களில் பலர் பணம் வாங்கி விமர்சனம் செய்வதாக சொல்லப்பட்டு வந்தது . அதிலும் மிகப்பெரிய நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் போன்றவர்களின் படங்கள் சிலவற்றை கூட இவர் கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளார்.அதற்கு ரசிகர்கள் மத்தியிலும்,திரைப்படத் திரையினர் மத்தியிலும் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்து வைத்துள்ளார்.   இந்நிலையில்  தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதில்  யூட்யூபில் அவர் இயக்கிய சார்லி சாப்ளின் -2  படத்திற்கு நல்ல விதமாக விமர்சனம் செய்ய பணம் கேட்டு மிரட்டியதாக போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இயக்குனர் “சக்தி சிதம்பரம்”.
Step2: Place in ads Display sections

unicc