36.7 C
Chennai
Monday, June 21, 2021

எனக்கு வாய்ப்பளித்தால், உங்கள் தேவைகளை பிச்சையெடுத்தாவது தீர்த்து வைப்பேன் – சீமான்


8
/ 100


எனக்கு வாய்ப்பளித்தல்  பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில், எந்த ஒரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் எண்ணூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது பேசுகையில், எனக்கு வாய்ப்பளித்தல்  பிச்சை எடுத்தாவது உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பேன் என்றும், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முதல்வராகவும் அமைச்சராகவும் ஆக முடியும் என்று சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலு,ம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சுங்கச் சாவடிகளும் நிரந்தரமாக மூடப்படும் என்றும், மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்றிருக்கும் அனைத்தும் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

Latest news

Related news