இன்றைய நாகரீகமான உலகில் நாகரீகங்கள் எவ்வாறு பெருகுகிறதோ, அதுபோல மனிதனுடைய உடலில் நோய்களும் பெருகி வருகிறது. மேலை நாட்டு உணவுகள், என்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழைந்ததோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும் சீர்கெட்டு விட்டது.

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இந்த தொப்பையை குறைப்பதாற்காக நாம் பல வழிகளை மேற்கொண்டிருப்போம். அவ்வாறு மேற்கொண்டும் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையா? அப்பா உங்களுக்காக தான் இந்த பதிவு.

தேவையானவை

  • கற்றாலை – 1
  • தண்ணீர் – 2 கப்

செய்முறை

கற்றாலையின் மேல் தோலினை சீவி, உள்ளிருக்கும் சதையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதனை மிக்சியில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவேண்டும். அதன் பின் அந்த ஜூஸை எடுத்துக் குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடித்து வந்தால், இது நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொப்பையினால் அவதிப்படுபவர்கள், ஒரு வாரத்திற்கு 3 முறை இதனை குடித்து வந்தால், தொப்பை மற்றும் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.