மதுரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் 100, மாஸ்க் 1 இலவசம்!

மாஸ்க் அணியாத மதுரை வாசிகளிடமிருந்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும்

By Rebekal | Published: May 20, 2020 03:24 PM

மாஸ்க் அணியாத மதுரை வாசிகளிடமிருந்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒரு மாஸ்க் அளிக்கப்பட வேண்டும் எனவும் மதுரை அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 49 லட்சத்துக்கு அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தொற்று உள்ளவர்களிடயிருந்து அடுத்தவருக்கு பரவாமல் இருப்பதற்காக, முக கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் என அரசாங்கம் மக்களை எச்சரித்து வருகிறது. இருப்பினும் பலர் அலட்சியமாக தான் இருக்கின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது மதுரை மாநகராட்சியில் நேற்று முதல் முக கவசம் இல்லாதவர்களிடம் 100 ருபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், அவர்களுக்கு ஒரு முக கவசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் விசாகன், பொதுமக்களுக்கு மட்டுமில்லாமால் மாநகராட்சி பணியாளர்கள் முககவசம் அணியாமல் பணிக்கு வந்தால் கூட அவர்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை ஒழிக்க ஒழுக்கம் தான் முக்கியம். 

வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் எனவும், அணியாமல் வருபவர்கள் மீது தயவு பார்க்காமல் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc