நாளை முதல் 2.30 மணிக்கு மேல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை .! எச்சரித்த முதலமைச்சர் .!

நாளை முதல் 2.30 மணிக்கு மேல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை .! எச்சரித்த முதலமைச்சர் .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வெளியே வருவது வருத்ததை  தருகிறது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி திறந்திருக்கும். அதற்கு மேல் பொதுமக்கள் வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் என கூறினார். 1,083 பேர் வீட்டிலே கண்காணிக்கபட்டு வருகின்றார்கள். மேலும் உரம், இடு பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும். காவல்துறை விவசாயிகளை தடுக்க வேண்டாம் என நாராயணசாமி கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube