மதுபானங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட்.! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

By

tasmac

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சஸ்பெண்ட் என நிர்வாகம் எச்சரிக்கை.

மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ஊழியர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி, அறிவுறுத்தியுள்ளது.  விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் டாஸ்மாஸ் மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும்,  டாஸ்மாக் தொழிற்சங்கங்களுக்கும் ரூ.10 வாங்க கூடாது என அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 charge extra
[Image Source : Twitter/@sunnewstamil]