,
anbumani

யோகாவை நாம் கடைபிடித்தால் தீமைகள் நம்மை நெருங்காது – அன்புமணி ராமதாஸ்

By

மனிதவாழ்வில் அருமருந்துகளில் ஒன்றான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

இன்று உலக யோகாதினம் அனுசரிக்கப்படும் நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், உடல் நலம், மனநலம் காக்க யோகா அவசியம்; அனைவரும் கற்று கடைபிடிக்க வேண்டும்!

நோய்களில் இருந்தும், கவலை மற்றும் அழுத்தங்களில் இருந்தும் காத்து உடல் நலனையும், மனநலனையும் பாதுகாக்கும் மகாசக்தி யோகா தான். யோகாவை நாம் கடைபிடித்தால் தீமைகள் நம்மை நெருங்காது. மனிதவாழ்வில் அருமருந்துகளில் ஒன்றான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்; கடைபிடிக்க வேண்டும்; அதன் மூலம் வாழ்வை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.