நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர்.லோக்கல் படத்தின் புரோமோ வீடியோ ஒன்றில் ஹெல்மட் அணிவது குறித்த விழிப்புணர்வு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், “நம்ம கரெக்ட்டா இருந்தாலே நம்ம ஊருல நம்மல ஒருமாதிரி தான் பார்ப்பாங்க. நமக்கு நம்ம ‘தல’ தான் முக்கியம்.” என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ அஜித் ரசிகர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxcX8uHAr-1/