இந்த ஒரு வார்த்தை உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்..!

இந்த ஒரு வார்த்தை உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

இந்த ஒரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. இதை மட்டும் எழுதி வைத்து பாருங்கள் உங்கள் வீட்டு பீரோவில், பிறகு நடப்பதை பார்த்து வியந்து விடுவீர்கள். பொதுவாக வாழ்க்கையில் அனைவருக்குமே தேவையான ஒன்று பணம் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாக அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி இருந்து வருகிறது.

அதனால் பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் உடல் உழைப்பைக் கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கும் பணத்தை சரியான விதத்தில் சேமிக்க முடியாமல் செலவாகி விடும் பட்சத்தில் இருக்கும் போது மனதில் பல கவலைகள் தோன்றும். வீட்டில் பணம் தங்காமல் கரைந்து கொண்டே இருக்கிறது என்றால் இந்த பரிகாரம் நிச்சயமாக உங்களுக்கு பலன் கொடுக்கும்.

முதலில் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதனை முழுமனதோடு நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே அது நிச்சயமாக நிறைவேறும். அதனால் மனதார நம்பி ஒரு வேலையை செய்ய தொடங்குங்கள், கண்டிப்பாக உங்களுக்கு முழு பலனை அளிக்கும். நாம் பார்க்க இருப்பது நமது வீட்டு பீரோவில் இந்த ஒரு வார்த்தை மட்டும் இருந்தால் போதும் நிச்சயம் வீட்டில் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் ‘அட்சயம்’. நாம் அட்சய பாத்திரம் என்பதை கேள்விப்பட்டிருப்போம். அள்ள அள்ள குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு பாத்திரத்தை தான் அட்சய பாத்திரம் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அட்சயம் என்ற வார்த்தைக்கு சக்தி அதிகம். இந்த வார்த்தையை தான் நமது வீட்டு பீரோவில் எழுதி வைக்க வேண்டும். எது உங்களுக்கு அதிகரிக்க வேண்டுமோ அந்த இடங்களில் நீங்கள் அட்சயம் என்ற வார்த்தையை எழுதி வைக்கலாம்.

உதாரணத்திற்கு சமையல் அறையில் சாப்பாடு என்றும் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அட்சயம் என்ற வார்த்தையை அங்கு எழுதி வைக்கலாம். அதைப்போல் குழந்தைகளுக்கு கல்வி அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் படிக்கும் இடத்தில் அட்சயம் என்ற வார்த்தையை எழுதலாம். இதே போல நீங்கள் விரும்பும் இடங்களில் எது அதிகரிக்க வேண்டுமோ அந்த இடங்களில் இந்த வார்த்தையை எழுதி வைக்கலாம்.

இதை எப்படி எழுத வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். முதலில் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமாக இருக்கக்கூடிய சந்தனத்தில் வாசனை நிறைந்த பன்னீரை சேர்த்து கலந்து விடுங்கள். இந்த சந்தனத்தை வைத்து தான் எழுதவேண்டும்.

வெள்ளைப் பேப்பரில் உங்களது வலது கையின் மோதிர விரலால் சந்தனத்தை எடுத்து ‘அட்சயம்’ என்று எழுதவேண்டும். இதனை மடிக்காமல் அப்படியே உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். இதேபோல சமையலறையில் அடுப்பிற்கு மேல் உள்ள சுவரில் பேப்பரில் அட்சயம் என்று எழுதி வைக்கலாம் அல்லது சுவரிலேயே அட்சயம் என்று எழுதலாம்.

குழந்தைகள் படிக்க கூடிய புத்தகங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பேப்பரில் அட்சயம் என்று எழுதி வைக்க வேண்டும். இதே போல நம்பிக்கையோடு உங்களுக்குப் எழுத வேண்டிய இடத்தில் அட்சயம் என்ற வார்த்தையை எழுதினால் பல மடங்கு நன்மைகள் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு இதனை செய்து வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.

Leave a Comment